
இலைகள் பறப்பதால் பறவைகள் என்று சொல்வதில்லை
நிலாவும் வெளிச்சம் தருவதால் சூரியன் என்று சொல்வதில்லை
வானும் பரந்து கிடப்பதால் அதை நிலம் என்று சொல்வதில்லை
காட்டுத் தீ வெளிச்சம் தருவதால் விளக்கு என்று சொல்வதில்லை
நட்சத்திரங்கள் மின்னுவதால் மின்மினி பூச்சி என்று சொல்வதில்லை
கை கால் முளைத்த அனைத்தையும் மனிதன் என்று சொல்வதில்லை
இது போல்
அது போல்
என்று சொல்லாத அனைத்தும் அழகே
