
- புகழ்
சொத்துக்களை துறந்தவனுக்கு
பற்றற்றவன்
வள்ளல்
என்ற புகழ் சொத்தானது.
அதுவே
விடமுடியாத சுமையானது
2. சிகரம்
உச்சிக்கு போகலாம், ஆனால் அங்கு
வாழ முடியாது
என்றான் நண்பன்.
ஊரையே அழைத்துக் கொண்டு
உச்சிக்குச் சென்றேன்.
அது இப்போது சிகரம் அல்ல,
ஊர் என்றான் நண்பன்.
எல்லோருக்குமான
தில்லையோ
சிகரம்.
3. அனுபவம்
கல்லூரி நாட்களில் அந்தத் தெரு வழியே போவேன்.
அவளைப் |பார்த்தேன்.
அவளும் என்னை பார்ப்பதாக நண்பர்கள் சொன்னார்கள் .
அடிக்கடி போனேன்,. .
அவளும் பார்ப்பதாக நினைத்தேன்.
பேரக் குழந்தையோடு பயணிக்கையில் ரயிலடியில்
அவள் போலவே இருந்தாள்.
பார்த்தேன் .
குழந்தை சொன்னது அந்த ஆன்ட்டி நம்பளை பார்க்கிறாங்க என்று.
எனக்கு நண்பர்களின் நினைவு வந்தது.
பயணம் தொடர்ந்தது.
அதற்கு மேல் அன்றும் இன்றும் சொல்லுவதற்கு எனக்கு ஒன்றும் இல்லை.

சிகரம் கவிதை எனக்குப் பிடித்திருக்கிறது.
லாவண்நா சத்யநாதன்.