நிஜந்தன் கவிதை

படம் முடிந்த வெள்ளித் திரையில்
ஒட்டிக் கிடந்த மின் பிம்பங்கள்
மூச்சின் நெடி அடைத்த
அரங்கின் குளிர் இருக்கைகளில்
உடைந்து போன இசையின்
கரும் வரிகளில்
காலாவதியான சொற்களின்
மீளாத் துயரில்
பதிந்த கதைகளின்
உறைந்த பாத்திரங்களாய்
மாறிப் போன
தின வாழ்வின்
துயர் இல்லாத
வெயில் நாளின்
பாதை தேடியது வான் நோக்கி
……..