
எத்தனை கவிகள் பாடிவிட்டார்
அந்த வானத்துச் சந்திரனை
எத்தனை காதலர் ஏசிவிட்டார்!
எத்தனை மொழிகளில்
எந்தெந்த ஊர்களில்
சந்தக் கவிகள் தான் வக்கணை
சாற்றிய தெத்தினையோ!
கவிகள் சொன்னதுவும் காதலர்
சொன்னதுவும் கொள்ளலும் ஆகுமோ?
ஆசைக் குழந்தையொன்று
ஆகாயத்தில் பறக்க விட்ட
பலூன் அது, கயிறிழுத்துத் தரை
சேர்க்க மறந்துவிட்ட பலூன்
மிதக்கிறது – சொல்லிவிட்டேன்!
(ஹல்மே என்கிற ஆங்கிலக் கவியின் கருத்தைப் பின்பற்றியது)
சரஸ்வதி : 25.11.1958
