யோகி இன்றொரு சேதி -126/விசிறி ஷங்கர் 

0

வேகமாக அசையும் யோகியின் இரு விரல்கள் தரும் சேதிதான் என்ன ?

O

யோகியின் குருநாதர் பப்பா இராமதாசர் 1952 ல் இராம நாம தீட்சை வழங்கிய போது

இராம மந்திரத்தை 24 மணி நேரமும் ஜபிக்குமாறு ஆணையிட்டார். குருவின் கட்டளையை சிரமேற்கொண்டு வாழ்ந்தவர் யோகி.

O

சதா இராம நாமத்தை ஜபம் செய்து வந்த யோகி அதன் அடையாளமாக ஜபமாலை உருட்டுவது போல தமது இருவிரல்களை அசைத்த வண்ணம் எப்போதும் இருப்பார்.

அது யோகியின் தனித்வ அடையாளம்.

O

ஜபமாலை உருட்டும் விதத்தில் யோகியின் இரு விரல் அசைவு தோன்றினாலும், ஜபமாலை உருட்டுகிற வேகத்தையெல்லாம் விஞ்சுகிற விசையோடு அந்த விரல்கள் அசையும்

O

வெறுமனே தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கும் யோகி திடீரென எழுவார். தமது மேற்போர்வையை சரி செய்வார். ஒரு கரத்தில் விசிறி, சிரட்டை, கயிறு, கம்பை எடுத்துக் கொள்வார் . விசிறி, சிரட்டைத் தொகுதிகளை தூக்கிப் பிடித்தபடி ஒரு கரம் உயரும் ! அதே நேரத்தில் மறுகரத்தின் ஆட்காட்டி விரலும், கட்டை விரலும் படு வேகமாக ஜப மாலை உருட்டுவதை போல் வேகமெடுத்து அசையும்… தூக்கிய கரங்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தபடி, எல்லோரையும் கூர்ந்து கவனிப்பார். அவர் பார்வையில் இருந்து அங்கே அமர்ந்திருக்கும் எவரும் தப்ப முடியாது. அவரது பார்வை எல்லோரையும் ஒரு கணம் அழுத்தமாகத் தொட்டு கடந்து செல்லும்.

O

அவர் நம்மீது தீர்க்கமாக தமது கவனத்தை குவிக்கிறார் என்பதை நம்மால் உணர முடியும்

O

யோகி தன்னை நாடி வந்தவர்களை முழுமையாக கவனித்தார். அவர்களுக்கு ஏதோ ஒரு நல்லதை செய்தருள வேண்டும் என்று தமது கூரிய பார்வை, வேகமான விரல் அசைவு மூலம் தீவிரமாக முயன்றார் என்பது தெளிவாகப் புலப்படும்.

O

அதுபோலவே, நம்மோடு உரையாடி நமது பிரச்சனைகளை கேட்டதும், அமர்ந்திருந்தபடியும், அவரது ஒரு கரம் உயர்ந்து ஆசிர்வதிக்கும். அதே கணத்தில் , மறுகரத்தில் இருவிரல்கள் வேகமெடுத்து அசைய, ஒரு தீவிரப் பார்வை நம்மீது படரும்.

O

அசையும் அந்த விரல்கள்

அக்கினிப் பிழம்பொன்றின் மேலெழும் நாவுகள் போல் ஏதோ ஒன்றை சுட்டெரிக்கின்றன.

O

அல்லியின் மெல்லிய இதழ்களைப் போல சொல்லிடும் வகையில் சுடர்மணி விரல்கள்….

இருவிரல் அசைய தருவது என்ன முத்திரைதானோ …

O

என்றெல்லாம் பாடி யோகியைக் கண்டு வியந்து மகிழ்கிறது சுரத கவசம் !

O

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

யோகி ராம்சுரத்குமார்

ஜயகுரு ராயா

May be an image of 2 people and people standing