நிதர்சனம்/லதா ரகுநாதன்

துடிக்கச்செய்யும் வார்த்தைகளால்
வெட்டிச்சாய்கிறாய்,
நிமிர்ந்து நின்று அவற்றை,
விஷமாக காதுகளின் வழி
அழுத்தி விழுங்கி,
உச்சி மண்டைக்குச் செல்லாமல்,
நீலகண்டனாய் கழுத்தில் நிறுத்திப் பிடிக்கிறேன்,
விஷம் வெறும் விஷயமாகி போகட்டும்.

One Comment on “நிதர்சனம்/லதா ரகுநாதன்”

Comments are closed.