ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 22

18.10.2021 – ஞாயிற்றுக்கிழமை

அழகியசிங்கர்

ஜெகன் : நீங்கள் திண்ணையில் கடற்கரை என்ற கவிஞரின்  கவிதைகள் பற்றி எழுதி உள்ளீர்கள் போலிருக்கிறது.

அழகியசிங்கர் :  ஆமாம். அதைப் படித்துவிட்டு அவர் எப்படி எடுத்துக்கொள்வார் என்பது தெரியாது.

ஜெகன் :  அவர் படிக்கிற வரை உங்களுக்கு அந்தச் சந்தேகம் இருக்கத்தான் இருக்கும்.

அழகியசிங்கர் :  யாரைப் பற்றியும் மோசமாகச் சொல்லக் கூடாது என்ற கொள்கையை வைத்துக்கொண்டிருக்கிறேன்.

மோகினி :  அது சாத்தியமா என்று தெரியவில்லை.

ஜெகன் :  நல்லதாகச் சொல்வதைவிடத் தப்பாக யாராவது சொல்லிவிட்டால் அதுவே எப்போதும் நிற்கும்.

அழகியசிங்கர் :  பல சந்தர்ப்பங்களில் தப்பான அபிப்பிராயமே முன்னால் நின்று எழுதுபவரை துன்பப்படுத்தும்.

ஜெகன் :  தமிழ் மரபு ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பாராட்டக் கூடாது.

அழகியசிங்கர் :  அரிதாகவே பாராட்டுவார்கள்.  ஒரு எழுத்தாளர் பேரைச் சொன்னால் போதும் அவர் குறித்து பலர் எதிர்ப்பு தெரிவிக்கமலிருக்க மாட்டார்கள்.

மோகினி :  நாம்தான் இது குறித்துக் கவலைப்படாமல் நமக்குப் பிடித்ததைச் செய்துகொண்டு போகணும்.


அழகியசிங்கர் : ஆமாம்.


ஜெகன் :  எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது உங்கள் பத்திரிகை.


அழகியசிங்கர் : தினமும் குறைந்தபட்சம் 10 போஸ்டிங்காவது போட வேண்டும். காலையில் கணினியைத் தொடும்போது யாராவது கதை கவிதை எழுதி உள்ளார்களா என்று பார்ப்பேன்.  வந்திருந்தால் உடனே படித்துவிட்டு அதைப் பதிவிடுவேன்.

மோகினி :  நீங்கள் எழுதுவது


அழகியசிங்கர் : நானும் எழுதுகிறேன்

ஜெகன் : உற்சாகமாகப் பொழுது போகிறது இல்லையா?

அழகியசிங்கர் : ஆமாம். 

மோகினி : இன்றைய சொற்பொழிவு முடிந்து விட்டது.  நாளை சந்திப்போம்.


அழகியசிங்கர் : (கை கூப்பியபடியே) சந்திப்போம்.