சுகந்த மாலை பொழுது/சிறகா

மலர்ந்தும் மலராமலும்
இருக்கும் இனிய மாலைப்பொழுது

மஞ்சள் வெயிலில்
குளியல் கொள்ளும்
சிறு நகரம்

உலர்ந்த சருகுகளின்
ஊடே பசும் போர்வையை போர்த்தி
மெல்ல நகைக்கும் குன்றுகள் ஒன்றுடன் மற்றொன்று பிணைந்தபடி

பெண்ணின் நளினமும்
ஆணின் கம்பீரமும் கலந்த படகுகள் நதிக்கரை ஓரம் இளைப்பாறிய வாறு
காத்திருக்கும்

அழகு தேவதைகளுடன்
உற்சாகமான மனோதிடமும் கொண்ட
இளையர்கள் வந்தமர்ந்து சவாரி செய்ய

ஒளியலைகள் ஊடுருவி ஓவியம் தீட்ட
காற்றின் தாலாட்டில்
கீதம் இசைக்கும் நதி நீர்.

One Comment on “சுகந்த மாலை பொழுது/சிறகா”

Comments are closed.