சுற்றம்/செ.புனிதஜோதி

நேற்றையப்பொழுது
நீங்கள் வந்தபோது
ஒருசிட்டுக்குருவியைப்போல்
பறந்து வந்து வரவேற்றேன்..

தன்தேவை மறந்து
சேவைசெய்யும்
அன்பிற்கு அடைபட்டிருக்கும்
கிளியின் சாயல் எனக்குள்

என்னிடத்தில் வருகையில்
அழகான முகமூடி அணிந்திருப்பீர்கள்
உங்கள் முகமூடியை
நம்பி எனக்குள்ளும்
பட்டாம்பூச்சி பறந்தது

எதிர்பாராத நேரத்தில்
உங்கள் முகமூடியை
கழற்றி வைத்தீர்கள்
இதுவரை கொத்தும்பாம்பிற்கு
பால்வார்த்திருப்பது புலப்பட்டது..

உங்களின் அடுத்த வருகையின்போது
அந்த பட்டாம்பூச்சி
தொலைந்தேப் போயிருந்தது

3 Comments on “சுற்றம்/செ.புனிதஜோதி”

Comments are closed.