
வைத்தகொலுவைச் சுற்றி விளையாடுகின்றன இரண்டு சுண்டெலிக்குஞ்சுகள்…
அவை ஒவ்வொரு பொம்மைக்குள்ளும் ஏறி இறங்கி
விளையாடும்போது வயிற்றில்
புளியைக் கரைக்கிறது.
ஏதாவது ஒன்றைத் தட்டிவிட்டால்
விழுந்து பாழாகிவிடுமோ என்ற கவலை….
அழகாய் அதுவிளையாடுவதைப்
பேத்திதான் கைகொட்டி ரசிக்கிறாள்…
அவரிடன் சொன்னால் எலியைப்
பிடிக்கிறேனென்று வீட்டைக் கொளுத்தும் பேர்வலி….
என்னசெய்ய …
மாலைக்கொழுவில் காயத்திரிமாமி பாதிக்கீர்த்தனையோடு நிறுத்திவிட்டு ஓடிவிட்டாள் எலியென்றால் அவளுக்குப்பயமாம்….
பொம்மைகள் வைத்திருந்த பொட்டிக்குள்தான் எலிகுட்டிபோட்டிருக்கவேண்டும்…
பொம்மைகளை அதனுடைய உரிமையாய் நினைத்து விளையாடுகிறது போலும்…
அவரும் எலிகளைப் பார்த்தார் …
“கவிதைகளைக் கடித்துவைக்கப்போகிறதடி” என்றார் பெரும் கவலையாய்…
எனக்கென்னவோ அப்படி நடந்தால் நல்லதென்றுதான் தோன்றுகிறது…எப்படியோ
இடம் காலியானால் சரி.
