
பட்டுக் கருநீலப் புடவையுமல்ல, பதித்த
நல் வயிரமும் அல்ல. அண்ணாந்து நோக்கி
அதனைக் கண்ணால் தொட்டுப் பார்த்தால்
அறிவோம் – பூச்சி அரித்த, ஒளிப் பூச்சி
அரித்த கறுப்புப் பழம் கம்பிளி அது.
ஆடிப்பாடி ஓய்ந்து, கூடி நின்று கூத்
தடித்து அயரும் வேளையிலே, குளிர் அடங்க
அதை எடுத்துப் போர்த்து மடக்கிக்
கொண்டு கிடக்க முடியுமானால் நன்றாக
இருக்கும். அநாவசியமாக உயரம் பறக்கிறதே!
(ஹல்மே என்கிற ஆங்கிலக் கவி எழுதியதைப் பின்பற்றி)
(எழுத்து ஜனவரி 1959)
