டி வி ராதாகிருஷ்ணன்
_
சிலேடைப் புலவர் காளமேகத்திடம் ‘த’ என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்
தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?
தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)
அடடா….பாடல் முழுதுமே இனிக்கிறதே..
இதே போன்று இனிக்கும் பாடல் ஒன்றை கவிஞர் கண்ணதாசன்..சர்வர் சுந்தரம் என்ற படத்திற்காக எழுதினார்..
தத்தை நெஞ்சம்
நெஞ்சம்
முத்தத்திலே
முத்தத்திலே
தித்தித்ததா இல்லையா
இல்லையா
முத்தம் அந்த
அந்த
தத்தை நெஞ்சில்
நெஞ்சில்
வித்திட்டதா இல்லையா
இல்லையா
கத்தும் கடல் முத்துக்களால்
பொட்டிட்டதா இல்லையா
பொட்டிட்டதில் அத்தான் நெஞ்சைத்
தொட்டிட்டதா இல்லையா
கொத்தும் கிளி கன்னங்களில்கோடிட்டதா இல்லையா
கோடிட்டதால் கோடி சுகம்
நேரிட்டதா இல்லையா
கண் பட்டதும் கை பட்டதும்
புண் பட்டதா இல்லையா
புண் பட்டதும் பெண்மை கொஞ்சம்
பண் பட்டதா இல்லையா
..நம் தமிழுக்கு ஈடு உண்டோ?
| ReplyForward |

சர்வர் சுந்தரம் பாடல் இதுபோன்ற பாடல் அன்று. வானம்பாடி திரைப்படத்தில் எஸ்.எஸ்.ஸார். மற்றும் தேவிகா பாடல் போட்டியில் தேவிகா பாடும் பாடல்தான் இதுபோன்ற பாடல்