இயற்கைத் தாய்/ நாகேந்திர பாரதி


எனக்குள் இருக்கும் ஆத்மாவே
எங்கும் நீயே இருக்கின்றாய்

அவனாய் இவனாய்
அவளாய் இவளாய்

அதுவாய் இதுவாய்
எதுவாய் எவராய்

எங்கும் இருக்கும்
இயற்கைத் தாயே

இருக்கும் இடத்தின்
இயல்பிற்கு ஏற்ப

உருவை மாற்றி
உணர்வைக் காட்டி

உள்ளுக் குள்ளே
ஒன்றாய் இருக்கும்

உன்னைக் காணும்
உவகை காட்டு

எங்கள் வாழ்வில்
இன்பம் கூட்டு
——————நாகேந்திர பாரதி