
நவராத்திரி : இரவு 2-
யாரோ கேட்கிறார்கள்.
கூட்ட நெரிசலிலில் உடைகிறது
உன் வேண்டுதல்.
பூசாரி பலி கொடுக்கிறார்.
குருதிவாடை பட்டவுடன்
சிலிர்க்கும் பூமி
செவ்வாடை மறைத்த யோனிபீடம்.
பிணம் எரித்தவன் பித்தன்

தொட்ட உடல்
ரத்தம் பூசி தீட்டுக் கழிக்கிறது.
ஹே சென்னிமல்லிகார்ஜூனா..
உன் ஊழித்தீயில்
ஜனித்த பிள்ளையை
எரிக்குமோ உன் சுடுகாடு?
சிவந்த வானம் ஆடும் தொட்டில்.
இதுவும் கனவா?
இரண்டாவது இரவு
இன்னும் முடியவில்லை.
நினைவிருக்கட்டும். .
