
ஒருவன் விட்டுச்சென்ற
பாதச் சுவடின் மீது
மற்றொருவனின் பாதம்
கடற்கரைமணல்வெளியெங்கும்
பாதச்சுவடுங்கள்..
எவனோ விட்டதை
ஒருவன் தொடர்கிறான்
சங்கிலி தொடராய்
நீள்கிறது பயணம்..
எங்கே ஆரம்பம்
மர்மமூடிச்சு
இன்றுவரை
ஒருமுடிவுக்குள்
கொண்டுவரமுடியா
தொடர்கதை..
எல்லைகள் அற்ற
வானத்தில்
ஆரம்பத்தை
ஒளித்து
வைத்துள்ளான்
தன்
ஆன்ம ஒளிக்குள்
தேடலின்
பிடிக்குள்
பயணம்
புதிராய்
நகர்த்துகின்றான்
வாழ்க்கைச்
சக்கரத்தை.
