
எப்பொழுது
கதவைத் தட்டும்
என்றறியாமல் வாழ்கிறோம்
எப்பொழுதும்
நம்பொழுதே
என்றெண்ணிச் சேர்க்கின்றோம்
அனைவருமே
எதிர்நோக்கும்
அதிசயமான ஓர் எதிரி
அது இருப்பதால்தான்
ஒரு சிலர்
அச்சமுடன் வாழ்கிறார்கள்
அப்படியும் பலபேர்
ஆடாத ஆட்டமாடி
அனைவரையும்
பகைவராக்கி
அதன் வாயில் வீழ்கிறார்கள்
இவ்வுலகின் புகழ்
இறப்புதான்
இதை எண்ணி நாம் வாழ்வோம்
