பொன்னியின் செல்வன்/Lakshmi Manivannan

ஒரு கிராண்ட் நரேஷன் சினிமா. ஹாலிவுட் சினிமாவில் இருபது ஆண்டுகளுக்கு முன்பே வந்தது. சமகாலத்தை ஒரு கிராண்ட் நரேஷன் காலம் என்றே வகுக்கலாம். கிராண்ட் நரேஷன் வேறு. வீரபாண்டிய கட்டபொம்மன் வகையறா படங்கள் வேறு . அந்த படத்தையும் இன்று ஒருவர் கிராண்ட் நரேஷனில் கொண்டு வர முடியும். மணி ரத்னம் போன்ற ஒருவருக்கு அது இயலக் கூடியதும் தான்.

தளபதியில் அவர் கிராண்ட் நரேஷனை தலைகீழாக வைத்து பார்த்தவர். டைட்டானிக் ஒரு கிராண்ட் நரேஷன் படம் தான்

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் இத்தகைய சொல்முறை சாத்தியப்பட்டிருக்குமா என்றால் இல்லை எனலாம். அப்போது பெரும்பாலும் கல்ட் பிலிம்ஸ் ஆக்ரமித்திருந்தன. புதுப்பேட்டை தொடங்கி சுப்பிரமணிய புரம் வரை. பொன்னியின் செல்வன் கிராண்ட் நரேஷனுக்கு அதற்கு உரிய சமயத்தில் உருவாகி வெளி வந்திருக்கும் படம்

பெரிய மேதைகளின் படைப்புகள் சொல்லும் முறையில் சமகாலத்தை அதன் சொல்முறையில் மட்டும் கொண்டிருப்பவை அல்ல. சொல்முறையால் தளம் மாறும் பண்பு கொண்டவை. அவற்றையே பாப் பிகஷ்ன் வகை என்கிறோம். சொல்முறையில் புதியதாக இருப்பதோடு மட்டும் அல்லாமல் கலையாகவும் பரிணமிக்கக் கூடியவை. அப்படி மாறாததால் இந்த படம் தட்டையாக தெரிகிறது .சில நிலக்காட்சிகளில் தெய்வங்கள் எழுகின்றன என்றாலும்

ரொம்ப நாட்களுக்குப் பிறகு முதல் காட்சியாகச் சென்று பொன்னியின் செல்வன் பார்த்தேன். நிச்சயம் அது பொன்னியின் செல்வனுக்காக இல்லை

திரிஷா ஈஸ் வெரி நைஸ்

வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

May be an image of 1 person and jewelry

40Manthiramoorthi Alagu, Gopal Manogar and 38 others

1 Comment