தமிழ் மொழியாக்கம் : மதுவந்தி

நான் அந்த தெருமுனையில்
எனக்கென ஒரு இடம் பிடித்து
உனக்கான பார்வையைத் தர
உனக்காகக் காத்திருக்கிறேன்.
ஆனால், விளம்பரங்கள் என் முகத்தை
மறைத்திருக்கின்றன.
அந்த நீல நிறக் கொச்சையான
விளம்பரங்களுக்கு நடுவே மின்னுகிற
ஓரிரண்டு உண்மைகளை
என் ஒர விழிப் பார்வையே
உனக்கு காட்டி விடுமென நினைத்தேன்.
ஆனால், இப்போதெல்லாம்
பார்வையிலிருந்து சொல்ல முடிவதில்லை,
காதலா வெறுப்பா என.
நம் பார்வைகள் ஒரு முறை
கலந்தாலே போதும்.
ஆனால், என் பார்வைகளும் கூட
விற்பனையாகிவிட்டன.
நியான் வெளிச்சம் இன்னும் நான்
சொல்லாத அந்தரங்கக் கதைகளைக் கூட
விற்பனைப் பண்டமாக்கி விட்டது.
நான் இன்னும் சொல்ல நினைத்தவை
எல்லாம் அந்த தெருமுனையில்
தவித்தபடி.
ஆனால், என் களைத்த முகமூடியோ
விளம்பரங்களிருந்து தொங்கியபடி .
வங்காள மூலம் : ஷங்க கோஷ்
ஆங்கில மொழியாக்கம் :அருணவா சின்ஹா
(ஸ்குரோல்/24 ஏப்ரல் 21.)
(இன்று உலக மொழி பெயர்ப்பு நாள். எனது ஒரு மொழியாக்கக் கவிதை மீள் பதிவு செய்கிறேன்)
