புதிய பெட்ரோல்!

ஒரு துடுக்குக் கதை…

ஜெ.பாஸ்கரன்

முத்துவின் சின்ன கார் பெட்ரோல் தீர்ந்து போக, நடுத் தெருவில் ஒரு தும்மலுடன் நின்றுவிட்டது. ஒரு தெரு தள்ளி திருப்பத்தில் இருந்தது பெட்ரோல் பங்க். அங்கிருந்த சிப்பந்தி, ‘எங்களிடம் காலி பாட்டில்கள் இல்லை; ஒரு சின்ன டின் அல்லது பாட்டில் கொண்டு வந்து, அதில் பெட்ரோல் பிடித்துச் செல்லுங்கள்’ என்றார். காரிலேதும் பாட்டில்கள் இல்லை. காலியான பியர் பாட்டில்களைக் காரில் வைத்துக்கொள்ளும் வழக்கம் இல்லாதவன்! மருத்துவ மனைக்குத் தானமாய்க் கொடுக்க எடுத்துச்செல்லும் ‘பெட் பேன்’ (Bedpan) ஒன்று டிக்கியில் கிடக்க, அதை எடுத்துக் கொண்டு பெட்ரோல் பங்க் சென்றான். சிறிது சிரமப்பட்டு, அதில் பெட்ரோல் பிடித்துக்கொண்டு வந்து, காரின் பெட்ரோல் ஊற்றும் வாயில் ஊற்றினான்! தூரத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டிருந்த இருவர் வியந்து சொன்னது:

“ஹெல்த் டிரிங்குன்னு சொன்னாங்க. இப்போ பெட்ரோலுக்கு பதிலா அதிலேயே காரெல்லாம் ஓடுதா?”.

(கருத்துக்கு நன்றி – ரீடர்ஸ் டைஜஸ்ட்.)