அத்தி நிற்கும் அடையாளமே/ கோவை எழிலன்

இலக்கிய இன்பம் 59

கடந்த பாடலில் கண்ட அதே புலவன் வாணபூபதியின் இருப்பிடத்தை மேலும் விவரித்து நீரும் அங்கு சென்றால் இத்தகைய பரிசு பெறலாகும் என ஆற்றுப் படுத்துகிறான்.

வாணபூபதியின் இருப்பிடத்தில் முத்துப் பல்லக்குகளும் உயர்ந்த மாளிகைகளும் கோபுரங்களும் இருக்கும்.

மேலும் அங்கு வேம்பு பலா அத்தி மற்றும் அரச மரங்கள் நின்று கொண்டிருக்கும். இவை மூவேந்தர்களின் அரச மரங்கள் என்பதால் இம்மரங்கள் நிற்கும் என்பது முறையே பாண்டிய, சேர சோழ மன்னர்களுடன் பல அரசர் அவன் முன் நின்று இருப்பர் என்ற பொருள் தருவது .

பாடலின் பின் பாதி இங்கே

“நீரும் இப்பரிசு பெற்று மீள்வர
லாகும் ஓடும் அவன் முன்றில்வாய்
நித்திலச் சிவிகை மாட மாளிகை
நெருங்கு கோபுர மருங்கெலாம்
ஆரும் நிற்கும் உயர் வேம்பும் நிற்கும்வளர்
பனையும் நிற்கும் அதன் அருகிலே
அரசும் நிற்கும் அரசைச் சுமந்த சில
அத்தி நிற்கும் அடையாளமே.”