ஆவச வியூகம் / மலையாளம்/ வளர்ச்சியின் வன்முறை/சுப்ரபாரதிமணியன்,

  சர்வதேச திரைப்பட விழா கேரளா 2022

சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ச்சியின் வன்முறை எப்படி இருக்கிறது என்பதை நான் என்னுடைய சாயத்திரை   நாவல் முதல் புத்துமண்  உட்பட  நாவல்களி, 11 கட்டுரை நூல்களிலும் நூற்றுக்கணக்கான கட்டுரைகளிலும்  கோடிடிட்டு இருக்கிறேன் .அது எப்படி மனித மனதையும்   சிதைக்கிறது என்பதை தான் என்னுடைய இலக்கிய படைப்புகள் சொல்கின்றன .இந்த விஷயங்களை சொல்லும் சமீபத்திய மலையாள படம் ஆவச வியூகம்

.சென்ற ஆண்டின் சிறந்த படத்திற்கான மாநில விருதை பெற்றுக் கொடுத்தபடம் .

இதனுடைய பின்னணியாக கேரளாவின் கொச்சி பகுதியில் புதுவைப்பு என்ற பிரதேசம் காட்டப்படுகிறது. நீர்நிலைகளிலும் கடல் பகுதிகளிலும் சூழப்பட்டு  உள்ளது அதை சார்ந்து மக்கள் வாழ்க்கையை நடத்த வேண்டியிருக்கிறது .சமூக அக்கறை இல்லாத காரணத்தினால் சுற்றுச்சூழல் கேடுகள் விளைகின்றன சுகாதார கேடுகள் அதிகரிக்கின்றன இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தொழிற்சாலை ஒன்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் கடல் பகுதியை நாசம்  செய்கின்றன .இதை அந்த பகுதி மக்கள் போராட்டங்களால் கேள்விகளைக் கேட்கிறார்கள் .இந்த கேள்விகளுக்கு மத்தியில் தனி மனிதர்களின் வாழ்க்கையும் அந்த கொச்சின் பகுதியும் என்னவாகிறது என்பதை விரிவாக இந்த படம் சொல்கிறது.

 இந்த படத்தில் வருகின்ற காட்சி அமைப்புகளில் காணப்படும் சிறு விலங்குகள் ,மீன் வகைகள் ,தவளைகள் ,பட்டாம்பூச்சிகள் உட்பட்டவை அந்தக் கதாபாத்திரங்களின் வாழ்வோடு சொல்லப்படுகிற போது அவை சார்ந்த நுணுக்கமான தகவல்கள்  பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.அவை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து வருவது,  அவற்றின் வாழ்வாதாரம் எப்படி இருக்கிறது மனிதனின் வாழ்வோடு இணைந்து அவை எப்படி இருக்கின்றன என்பதைப் பற்றி பல்வேறு ஆராய்ச்சி குறிப்புகள், தரவுகள் பல்வேறு கதாபாத்திரங்கள் மூலமாக சொல்லப்படுகிறது, இந்த கதாபாத்திரங்கள் எல்லாம் ஆய்வாளர்களாக இருக்கிறார்கள், அவர்களின் ஆய்வுகளின் தரவுகள் அங்கங்கே வைக்கப்படுகின்றன இதன் மூலமாக அழிந்து வரும் பல நுண்ணுயிர்கள் தாவரங்கள் செடிகள் பற்றிய கண்ணோட்டம் கிடைக்கின்றது .அதேபோல் அழிந்து வரும் சிறிய மீன் இனங்கள் உருமாறும் தவளை போன்றவை அடையாளம் காட்டப்படுகின்றன .

ஒரு சாதாரண குடும்பத்து பெண்ணான கதாநாயகி இறால் மீன்கள்  பதப்படுத்தும் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்க்கிறாள்.    அந்த தொழிற்சாலையின் உரிமையாளர்   காமுகன் . பல குற்றங்களை செய்வபவனாகவும் இருக்கிறான். அவன்இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புகிற போது அவள் மறுத்து விடுகிறாள் .அது விரோதமாக மாறுகிறது அதை தட்டி கேட்க ஒரு புதியவன் அங்கு வந்து அறிமுகம் ஆகிறான். அவன் பலசாலியாக இருக்கிறான் .மீனினங்கள் ,  நீர் நிலை உயிர்களோடும் சகஜமாக பேசக் கூடியவனாக இருக்கிறான்.இயற்கையை ரசித்து அதனோடு இணைந்து வாழ்கிறவனாக இருக்கிறான். வகைவகையாய் மீன்களை அவன் பிடித்தாலும் அவன் அசைவ  உணவை உண்பதில்லை. சாதாரண உணவை தான் உண்கிறான் அதேபோல யாரையும் காயப்படுத்தாமல் .எளிமையாக இருக்கிறான் ஆனால் இந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக தொழிற்சாலை முதலாளி செயல்படும்போது அவன் தட்டி கேட்பதால் அவன் விரோதி ஆகிறான் .அவன் அடித்து வீழ்த்தப்படுகிறான்.

 ஆனால் அவன்  நெடுநாளைக்கு அப்புறம் கடற்கரையில் ஒதுங்கிய கிடக்க அவனைக் காப்பாற்றும் இன்னொரு ஆள் மீன் வியாபாரி யாகி அவர் மூலமாக பெரும் சொத்தை சேர்க்கிறார் மீன்களோடு உறவாடுவது ,மீன் பிடிப்பது கடல் உயிர்களோடு இருப்பது என்று அவனின் தன்மைகள் அவரின் வியாபாரத்திற்கு உபயோகமாக இருக்கின்ற,ன. ஆனால் அவன் எதிர்தரப்பினர் இது சார்ந்து அவனை வலையில் வீழ்த்தி காவல் துறையில் மாட்ட வைத்துவிடுகிறார்கள் அங்கிருந்து அவன் அவர்களின் லாபத்துக்காக தற்போது அவனை பயன்படுத்திக்கொள்கிறார்கள் அந்தவகையில் விரோதங்கள் தொடர்கின்றன. விரோதங்களின உச்சமாய் அவர் மீண்டும் துப்பாக்கியால் சுடப்பட்டு கிடக்கிறான்

தப்பித்துப் போய் ஒரு  தீவின் கிராம வீட்டில் ஒளிந்து கொள்கிறான். அந்த வீடு பலவகையில்  கண்காட்சி பொருளாகிறது . கொரானா காலத்தில் அவனை வந்து  பலர் பார்ப்பதும் வேடிக்கை காட்டுவதும் வேடிக்கை பார்ப்பதும் பலருக்கு பொழுது போக்காக  இருக்கிறது .அவனுடைய உருவம் மாறிவிடுகிறது அவன் ஏகதேசம் ஒரு பிராணி போல் ஆகி விடுகிறான் .அவன் இனங்காண முடியாத ஒரு தவளை போல் ஆகிவிடுகிறான்  என்று பிரச்சாரம் செய்யப்படுகிறது .அவனை இனம் கண்டு கொண்ட முன்னாள் விரோதிகள் அவரை மீண்டும் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகிறார்கள் .அவன் இந்த முறை சாவில்  இருந்து  தப்புவதும் இல்லை .இதுதான் இந்த படத்தின் கதையாக இருந்தாலும் இந்த இந்த படத்தில் வருகின்ற கதாபத்திரங்கள் மூலமாக சொல்லப்படும் விஷயங்கள் அனைத்தும் சுற்றுச்சூழல் சார்ந்த கருத்துக்களாக உருமாறியுள்ளன.

 காப்காவின் உருமாற்றம் கதையில் வரும் மனிதனைப்போல கதையின் கதாநாயகன்  ஓர் இனம் காண முடியாத தவனாக மாறிப் போய் விடுகிறான் சிறு உயிரினங்கள் உடன் அவன் உரையாடுவது முதல் அவற்றுடன் இணைந்து வாழ்வது வரை அவனின் அடையாளம் பலருக்கு சந்தேகமாக இருக்கிறது .இந்த சுற்றுச்சூழல் கேடு சார்ந்து தரப்படுகின்ற விஷயங்கள் நம்  இன்றைய நுகர்வுக் கலாச்சாரம் சமூகம் பற்றிய எச்சரிக்கையாகவே இருக்கிறது அவன் ஒரு சூப்பர் மனிதனாகத்தான் படம் முழுதும் காட்டப்படுகிறான். பகட்டான கதாநாயகன் அல்ல ஆனால் ஒரு சூப்பர் ஹீரோவாக உடலமைப்பிலும் அவன் நடத்தையிலும்  தெரிகிறான். இந்தப் பின்னணியில் இதைச் சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களுக்கும் அழிந்து கொண்டிருக்கும் சிறு இனங்கள் உயிரினங்கள் பூச்சிகள் தாவரங்கள் ஆகியவை பற்றி ஒரு ஆய்விற்குமான விஷயமாக இந்த படம் பிரமாண்டமாக உருவாகி இருக்கிறது. ஆண்டுதோறுக் சுமார் 30,000 உயிரினங்கள் தங்கள் வாழ்விடங்கள் சுற்றுச்சூழல் கேட்டால் அழிவதால் இடம்பெயர்ந்து புதிய இடங்களில் வாழ் இயலாமல் அழிகின்றன.நுண்ணுயிர்கள் உள்ளிட்ட  பல்லுயிர்கள் அழிவது அவற்றின் வாழ்விடமான மண்ணையும் நீர்நிலைகளையும் பாதிக்கிறது. மாய யதார்த்த வகை சூழலும் சின்னச்சன்ன தொன்மக் கதைகளும் இந்த திரைப்படத்தின் நேர்கோட்டு இல்லாத தன்மையும் இதை ஒரு சிறந்த திரைப்படமாக முயற்சிக்கு ஒத்துழைக்கின்றன . சுற்றுச்சூழல் விஷயத்தில் வளர்ச்சியின் வன்முறை எப்படி இருக்கிறது  என்ற  ஒரு கேள்வியை இலக்கிய படைப்புகள், திரைப்பட முயற்சிகள்  தரும் வகையில் ஒரு திரைப்படத்தை எடுத்திருக்கும் இயக்குனர் கிருஷ்ணந்த் பாராட்டுக்குறியவர்  ஆவார்