நிழலாய் நினைவுகள்/செ.புனிதஜோதி

ஏனோ
இந்த பகல்
ஏதோ செய்கிறது
வெளிச்சம் பரப்பிக்கிடந்தாலும்
எனக்குள் இருண்மையை
எழுதிச் செல்கிறது

தன்னைத்தானே
தின்று அந்தியில்
கரைந்து போகும்
சூரியனைப்போல்
என்னை எனக்குள் கரைத்துக்கொண்டிருக்கிறது
இந்த பகல்

அந்த அந்திக்காய்
காத்துக்கொண்டிருக்கிறேன்
கரைந்த மிச்சத்தில்
எதனை எடுத்துக்கொண்டு
இரவுக்குள் செல்ல போகிறேன்

பகலை இருண்மைக்குள்
தள்ளியவை
இரவை எதற்குள்
தள்ளப்போகிறது