புத்தகம் 2/அழகியசிங்கர்

நான்
ஒவ்வொரு இடமாய்ப்
புத்தகம் தேடி
வாங்கி வருகிறேன்
பலமணிநேரம்
திருவல்லிக்கேணி
பிளாட்பாரக் கடைகளை
சல்லடைப் போட்டு
அபூர்வமான புத்தகங்களை எடுக்கிறேன்.

நீங்கள் சுலபமாக
என்னிடம்
புத்தகம் கேட்டு வாங்கி விடுகிறீர்

நீங்களும் படிப்பதாக
சொல்கிறீர்கள்
ஆனால் என்னிடமிருந்து
அபகரித்து விடுகிறீர்கள்

உங்களிடம்
நியாயம் எதிர்பார்க்க
முடியாது

நீங்கள் என்னிடம்
புத்தகங்களைக்
கேட்காமல்
இருப்பது உங்களுக்கும்
நல்லது
எனக்கும் நல்லது

நமஸ்தே
போய் வாருங்கள்.