இனிக்கும் தமிழ்-143/?/ டி வி ராதாகிருஷ்ணன்

கண்ணன்

?/x

கண்ணன்

சிலப்பதிகாரம் – நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே

பிறந்து பெரியவானாகும் வரை மாமன் கம்சன் மூலம் பிறந்த சிக்கல்களை
சமாளிக்க வேண்டி இருந்தது.

பின் பாண்டவரக்ளுகாக படாத பட்டு பட்டான்.
துரியோதனன் போன்ற மூடனிடம் தூது போனான்.
அறம் அல்ல என்று தெரிந்தும் பாண்டவர்களுக்காக சிலவற்றை செய்தான்.
தன்னை நம்பிய பக்தர்களுக்காக பகவான் தான் என்ன பாடு படுகிறான்.
அவனைப் போற்றாத நா என்ன நாவே.

மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம்
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாரயணா என்னா நாவென்ன நாவே-

                _இளங்கோவடிகள்

பதவுரை

மடந்தாழு நெஞ்சத்துக் = மடமையால் தாழ்ந்த நெஞ்சைக் கொண்ட
கஞ்சனார் = கம்சனின்
வஞ்சம் கடந்தானை = வஞ்சக திட்டங்களை முறியடித்து வந்தவனை
நூற்றுவர்பால் = கௌரவர்களிடம்
நாற்றிசையும் போற்றப் = நான்கு திசைகளும் போற்ற, நான்கு திசைகளில்
உள்ளவர்களும் போற்ற

படர்ந்தா ரணமுழங்கப் = சென்று, வேதங்கள் முழங்க
பஞ்சவர்க்குத் தூது நடந்தானை = பஞ்ச பாண்டவர்களுக்கு தூது சென்றவனை
ஏத்தாத நாவென்ன நாவே = புகழாத நாக்கு என்ன நாக்கே
நாராயணா வென்னா நாவென்ன நாவே = நாராயணா என்று சொல்லாத நாக்கு என்ன நாக்கே

பொருள்:

“அறியாமை மிக்க உள்ளம் கொண்ட கம்சனின் வஞ்சகச் செயல்களை வென்றவன்

கண்ணன்; நான்கு திசைகளும் போற்றவும் வேதங்கள் முழங்கி வழிபடவும்
பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன்
கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும். #நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?” என்று இப்பாடல் கேட்கிறது.

பாண்டவர்களுக்காகத் துரியோதனன் முதலிய நூறு பேரிடம் தூது சென்றவன்
கண்ணன்; இவனைப் போற்றிப் பாடாத நாக்கு பயனற்ற நாக்காகும். #நாராயணா என்று கூறாத நாக்கு என்ன நாக்கு?” என்று இப்பாடல் கேட்கிறது.

One Comment on “இனிக்கும் தமிழ்-143/?/ டி வி ராதாகிருஷ்ணன்”

Comments are closed.