
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும் நிகழ்வில் வாசித்த கவிதை )
தந்தையிடம்
கிட்டா பாசம்
சகோதரனிடம்
கிட்டா புரிந்துணர்வு
துணைவனிடம்
கிட்டா மதிப்பு
பெற்றிருந்தால்
கிட்டியிருக்கக்கூடிய
மகனின் கிண்டல் நிறைந்த
கரிசனம்
அனைத்தையும் குழைத்து
ஒருங்கே தந்த
நீ
இப்போது
என் வாழ்க்கையில்
இல்லாவிட்டால்தான்
என்ன?
உளதே உன் நட்பின்
வாசம்
என் சுவாசத்தில்
சென்மத்திற்கும்.
