
(07.10.2022 அன்று 90 வது விருட்சம் கவிதை நேசிக்கும்
நிகழ்வில் வாசித்த கவிதை )
தட்டிக் கொடுக்கின்ற
தன்மையில் ஆகட்டும்
குட்டி அடக்குகின்ற
குறும்பில் ஆகட்டும்
எட்டி இருந்தாலும்
எதிரில் இருந்தாலும்
கட்டிப் போடுகின்ற
கருணைத் தாய்மையில்
ஒருவருக் கொருவர்
உள்ளமாய் மாறி
துன்பம் துடைக்கின்ற
தோழியடி நீ எனக்கு
——————
