கடலில் ஒட்டகம்/மீனாட்சி சுந்தரமூர்த்தி

அசைந்து, அசைந்து ஆடிச்
செல்லும்,
சிலவேளை வேகம் எடுக்கும்.

கடுங்குளிரோ, சுடும் வெயிலோ
தாங்கும்
சங்கநாதம் எழுப்பும்.

உறவோ, பகையோ , ஏழை,
பணம்
படைத்தவனோ எவரையும்
ஏற்றிப் போகும்.

புறப்படும் இடமதிலே வயிறு
நிரப்பிக் கொள்ளும்.
உருவம் உயரம்.
ஊர் சுற்றிக் காட்டும்.