ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 45/அழகியசிங்கர்

13.10.2022 – வியாழக்கிழமை

ஆசிரியர் பக்கம்

மூவரும் சம்பிரதாய வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டபின் அமர்ந்து கொண்டு பேசுகிறார்கள்

 மோகினி:  ரொம்ப நாட்கள் ஆகி விட்டன. நாம் சந்தித்து.

அழகியசிங்கர் : ஆமாம். 

ஜெகன் :  சந்தித்து என்ன பேசுவது என்பது அலுப்பாகத்தான் இருக்கிறது.

மோகினி :  எதையாவது பேசலாம்.  எத்தனையோ இருக்கின்றன பேச.

அழகியசிங்கர் : உண்மைதான். 

மோகினி :  இப்போது பேசப் 'பொன்னியின் செல்வன்' மாட்டிக்கொண்டிருக்கிறது. 

அழகியசிங்கர் : ஆமாம்.  கலகலப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது.

ஜெகன் :  ஆனால் மக்கள் குடும்பத்துடன் இந்தப் படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அழகியசிங்கர்:  நீங்கள் படத்தைப் பார்த்து விட்டீர்களா?

ஜெகன் பார்த்துவிட்டோம்.

அழகியசிங்கர் : நான் இன்னும் ஒருமுறை பார்க்க வேண்டுமென்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

மோகினி :  நானும்.

ஜெகன் :  நானும்தான்.

மோகினி : வேடிக்கையாக இருக்கிறது.  நீங்கள் திரும்பவும் இன்னுமொருமுறை புத்தகத்தைப் படிக்க வேண்டுமென்று சொல்வது.

அழகியசிங்கர் :நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது படித்தது.  திரும்பவும் இப்போது படிக்கத் தொடங்கியிருக்கிறேன். சில பெயர்களைத் தவிரக் கதை முழுவதும் மறந்து விட்டேன். திரும்பவும் வாசிப்பது என்பது புதிதாக வாசிப்பதுபோல் உள்ளது. 

ஜெகன் : நாங்களும் வாசிப்பதாக உள்ளோம்.

அழகியசிங்கர் : தினமும் ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்துக் கொண்டிருக்கிறேன்.

மோகினி :   நாளைக்கு நடக்கும் கதைஞர்களை கொண்டாடுவோம் நிகழ்ச்சிக்கு கல்கி சிறுகதைகளைத்தான் பேச உள்ளீர்கள் போலிருக்கிறது.

அழகியசிங்கர் :  ஆமாம்.  கல்கி மட்டுமல்ல என் நண்பர் பஞ்சாட்சரம் செல்வராஜின் கதைகளையும் வாசிக்க உள்ளோம்.

மோகினி :  கதையின் ஒரு வரியை நீங்கள் குறிப்பிடுவீர்கள் போலிருக்கிறது. 

அழகியசிங்கர் : ஆமாம்.  அதற்கு ஒரு கதையை நான் இரண்டு முறை படிக்க வேண்டும்.  ஒரு பாரா ஒவ்வொரு கதையைப் பற்றி எழுத வேண்டும்.

ஜெகன்: இன்று பேசியது போதும்.

மோகினி : போதும்

அழகியசிங்கர்.  நாம் சந்தித்துப் பேச ஆரம்பித்து விட்டாயிற்று.  இனிமேல் தொடர்ந்து பேசலாம்

.
இரவு 10.37 மணி