இனிக்கும் தமிழ் – 145/டி வி ராதாகிருஷ்ணன்

உலகில் இரு கோயில்கள் உண்டு என்கிறார் திருமூலர். அவை,

  1. படமாடுகின்ற கோயில்
  2. நடமாடும் கோயில்.

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி வைத்து வழி பட்டமையால் படமாடக் கோயில் என்றார்.தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளை காணிக்கையாக அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால் நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச் சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயின்
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஆங்கு ஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே