பஞ்சாட்சரம் செல்வராஜன் கதைகள்/அழகியசிங்கர்

இன்று 14.10.2022) நடந்த விருட்சம் கதைஞர்களின் கூட்டத்தில் உரையாடிய கதைகளின் முன் சுருக்கம்.

  1. தந்தை என் நோற்றான்

நிச்சயமாக இந்தக் கதையைப் படிப்பவருக்கு கண்கள் கலங்கும்.
இரக்கமற்ற அலுவலகம். இரக்கமற்ற குடும்பம். அவன் வேலைக்குச் சேர்ந்து 12 வருடங்கள் ஆகின்றன. அவன் அப்பா 51 வயதில் இறந்ததால் இவனுக்கு அவர் வேலை கிடைத்தது. கதைசொல்லி ஒரு அதிகாரி. இவனை தன் மகன் போல் பார்த்துக் கொள்கிறார் அலுவலகத்தில். ஒரு விபத்தில் இவன் இறந்து விடுகிறான். கடைசி வரை அவனுக்கு இணக்கமில்லாத மனைவி. கதை முடிவில் அவனை நினைத்து கண் கலங்குகிறாள்.

2. பிராயச்சித்தம்

உமர்பாய் ஒரு கேன்ஸர் நோயாளி. அவர் மரணம் நிச்சயம். கதைசொல்லி ஒரு மருத்துவர். பள்ளிப் பிராயத்திலிருந்து உமர்பாய் நண்பர். ஆரம்பத்தில் உமர்பாயிக்கு செய்த தீங்கைக் கலைய முற்படுகிறார் டாக்டர். நீண்டகால பார்க்காத அவர் சகோதரியைப் பார்க்க வைக்கிறார் டாக்டர். உமர்பாயிக்கு மகிழ்ச்சி.
உமார்பாயிக்கு டாக்டர் செய்த துரோகங்களைப் போக்கத்தான் டாக்டர் உதவினார் . இதுதான் பிராயச்சித்தம் கதை.

3. கடைக்குட்டி தீரஜ்

தீரஜ் வாழ்க்கையில் நடக்கிற ஒருநாள் கூத்து இந்தக்கதை. 6வது படிக்கிற பையனின் காலை 6.15 லிருந்து இரவு 11.15 வரை நடக்கும் கதை. சிறப்பாக எழுதி உள்ளார்.