நம்பிக்கையும் அற்புதமும்
ஆதிகாலத்தில், மனிதன் பருவநிலைகளைக் கணித்துக் கொள்வதற்காக, சந்திர சூரியர்களை முதலில் அவதானித்தான். மழை எப்போது பெய்யும் என்று கணித்து, அந்தச் சமயத்துக்கு ஏற்ற மாதிரி விதைக்க வேண்டும். இதற்காகவே, சூரிய சந்திர சஞ்சாரத்தை மனிதன் கணிக்கத் துவங்கினான். சந்திர சஞ்சாரத்தைப் பற்றி, மிக ஆதிகாலத்தில் மனிதன் தப்புக்கணக்கு ஒன்றைப் போட்டதன் விளைவாக, சில நம்பிக்கைகள் - அல்லது நம்பிக்கை சார்ந்த சக்திகள் - பிறந்திருக்கின்றன; முக்கியமாக, 13 என்ற எண் மிகவும் கெடுதலானது என்ற நம்பிக்கை பிறந்தமை ஆகும்.
கவிஞர் பிரமிள் ஆன்மீகக் கட்டுரை:

அன்றைய காலத்தில், பூமியைச் சூரிய சந்திரர்கள் சுற்றி வருகின்றன என்பதுதான் நம்பிக்கை. இதன்படி, ஒரு தடவை பூமியைச் சுற்றிவரும் ஒரு வருஷ காலகட்டத்தில், சந்திரன் 12 தடவை பூமியைச் சுற்றுகிறது. இதுதான் அன்றைய கணிப்பு. இதன் அடிப்படையில், பருவநிலைகள் தீர்மானிக்கப்பட்டன. இதில் ஒரு தவறு இருந்தமை ஆதிகாலத்தவர்களுக்குத் தெரியவில்லை. சூரியன் ஒரு தடவை பூமியைச் சுற்றும் ஒரு வருஷ காலத்தில், சந்திரன் சரியாக 12 தடவை சுற்றுவதில்லை; ஒரு சில நாட்கள் அதிகமாகவே சுற்றும். ஒவ்வொரு வருஷத்திலும் நாட்கள் அதிகரிக்கும். இப்படியே போய், திடீரென்று ஒரு வருஷத்தில், சந்திரன் 13 தடவைகள் சுற்றிவிடும். அந்தக் காலங்களில், விவசாயம் அரோகரா! ஏனெனில், வருஷாந்திர பருவநிலைகள் பற்றிய கணிப்பு, அந்த வருஷத்தைச் சார்ந்த காலங்களில் பொருந்தி வரவில்லை. எனவே, விதைப்புக்காலம் குழப்பமாகி, அழிவு ஏற்பட்டிருக்கிறது.
போகப்போக, சந்திர சஞ்சாரத்தையும் சரிவரக் கணிக்கும் முயற்சிகள் நதிப்பள்ளத்தாக்குகளில் ஆரம்பித்தன. இந்தக் கணிதம் தான், நாகரிகத்தின் அத்திவாரமாயிற்று. பருவநிலைகளை முன்கூட்டியே இந்தக் கணிதமுறையின் மூலம் கண்டுபிடிக்க முடியும்; மனித வாழ்வையும் சூரியன், சந்திரன், செவ்வாய் போன்ற கிரக சஞ்சாரங்கள் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்து வளர்ந்திருக்கிறது. ஜோதிடத்தால் நிச்சயிக்கப்பட்ட விவசாய விருத்தியைச் சார்ந்துதான், விஞ்ஞானமே பிறந்தது என்று கூறலாம். நதிப் பள்ளத்தாக்குகளில் ஆரம்பித்த விவசாயம், காட்டுப் பகுதிகளுக்கு விரிவடைந்தது என்றால், பருவநிலைகளை நிச்சயித்த ஜோதிடந்தான் இதற்கு ஆதாரம். தொடர்ந்து, உழவுக்கருவிகளுக்காகவும் மரங்களை வெட்டி வயல்களை உருவாக்குவதற்காகவும் ஆயுதம் தேவைப்பட்டது. மண்ணில் இருந்து உலோகத்தைப் பிரிக்கும் விஞ்ஞானம் பிறந்த சமயம் இதுதான். இதுவே, கருவிகளையும் படையெடுப்புகளையும் சாம்ராஜ்யம்களையும் கூட உருவாக்கிய சரித்திரகதியாக மாற்றம் பெற்றுள்ளது.
சந்திரனில் மனிதன் காலடி வைத்துவிட்ட இன்றைய விஞ்ஞான உலகில் கூட அமெரிக்கா ஐரோப்பா போன்ற விஞ்ஞானக் கல்வி கொண்ட நாடுகளில், ஜோதிடத்தின் ஆதிக்கம் குறையவில்லை. இதற்கு மாறாக, வளர்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். வெளிப்படையாக என்ன சொன்னாலும் சரி, தனிப்பட்டமுறையில், ஜோதிடத்தை ஏதோ ஒரு விதத்தில் பல்வேறு விதமானவர்கள் பின்பற்றுகிறார்கள்; விஞ்ஞானக் கல்வி கற்றவர்கள், கடவுள் இல்லை என்று கூறும் கம்யூனிஸ்டுகள் என்று பல்வேறு விதமான மனிதர்கள், ஓரொருவிதங்களில், ஏதேனும் ஒரு ஜோதிட முறையினைப் பின்பற்றுவது இன்று சகஜமாகிவிட்டது.
பார்க்கப்போனால், அன்றாட வாழ்வின் பிரச்சனைகளும் பயங்களும் ஆசைகளும் தான் இப்படி இவர்களை ஜோதிடத்துக்கு இழுக்கிறது என்று காணலாம். ஆதிகாலத்து மனிதன் பருவ நிலைகளைப் பற்றி வைத்திருந்த அதே பயம் தான், இன்றைய அதி நவீன உலகிலும் வேறு வடிவு எடுத்துப் பிறந்திருக்கிறது எனலாம். விவசாயத்திலிருந்து சாம்ராஜ்யங்கள் வரை, பல்வேறு விஷயங்களுக்காக ஜோதிடத்தின் ஆலோசனையை மனிதன் அணுகியிருக்கிறான். அதே மனிதன், தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்காகவும், ஜோதிடத்தை அணுகியமை ஆச்சரியம் இல்லை. முந்திய விஷயத்திலிருந்து பிறந்த தவிர்க்கமுடியாத விளைவுதான் இது.
சூரிய சந்திரரைத் தொடர்ந்து, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் உலக வாழ்வைப் பாதிப்பவை என்ற தகுதியைப் பெற்றன. இவற்றுடன், விசேஷமாக இந்தியாவில், ராகு கேது என்ற கிரகங்களும் வானில் இருந்து வாழ்வைப் பாதிப்பதாகக் கருதப்பட்டிருக்கிறது. ராகுவும் கேதுவும் உண்மையில் கிரகங்கள் அல்ல. சூரியகிரகணம், சந்திரகிரகணம் இரண்டும் ஏற்படக்கூடிய வெற்று இடங்கள் இவை. இந்த குறிப்பிட்ட இடங்களே ராகுவாகவும் கேதுவாகவும் உருவகப்படுத்தப்பட்டன. நெடுங்காலமாக, மேற்கு நாடுகளில் ஜோதிடர்கள், ராகு கேதுக்களை முக்கியமாகக் கருதவில்லை. இப்போது, இந்திய ஜோதிடர்களைப் போன்று அவர்களும், ராகு கேதுக்களுக்கு முக்கியத்துவம் தருகின்றனர்.
மனித வாழ்வைக் கிரகங்கள் ஆட்சி செய்கின்றனவா என்பது பற்றி, பொதுவாக விஞ்ஞானத்துறை அக்கறை காட்டுவதில்லை. ஆனால் மனித வாழ்வை உயிரற்ற கிரகங்கள் ஆள முடியாது என்ற விஞ்ஞான அடிப்படை இருக்கவே இருக்கிறது. இருந்தும்கூட, எல்லா ஜீவராசிகளும் கிரகங்கள் யாவற்றையும், ஏதோ ஒரு விதத்தில் தங்கள் பிரக்ஞை மூலம் கவனிக்கின்றன என்பது, இன்று விஞ்ஞானிகளினால் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. மரங்களில் இருந்து மனிதர் வரை இது பொருந்தும். உதாரணமாக, குரு என்ற கிரகம் இப்போது வானில் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதை, ஒவ்வொரு ஜீவனும் உள்ளூர உணர்ந்து கொண்டிருக்கிறதாம். இது விஞ்ஞானக் கண்டுபிடிப்பு. உள்ளூர ஏதோ ஒரு விதத்தில்தான், கிரக நிலைகளை ஜீவன்கள் அறிந்து கொள்கின்றன. இதே உள்ளறிவை, வெளிமனத்தின் மூலம் அறிவதற்கு முயன்ற கதை தான், மனித நாகரிகத்தின் கதை.
(1987)