துளி 255/அழகியசிங்கர்

சமீபத்தில் கல்கியின்  பொன்னியின் செல்வன் படம், என்னை 35 ஆண்டுகளுக்கு முன் போக வைத்துவிட்டது. பொ.செ ஏற்கனவே படித்த நாவல்.  அதன்பின் தொடவில்லை.  ஏன் சரித்திர நாவலிலிருந்து  என் பாதை திரும்பி விட்டது. 
பள்ளிக்கூடக் காலத்தில் கல்கி, சாண்டில்யன் நாவல்களைப் படித்திருக்கிறேன்.    ஒரு கட்டத்தில் ஏனோ  சரித்திர நாவலே பிடிக்கவில்லை. 




இப்போது பொன்னியின் செல்வன் நாவலைத் திரும்பவும் எடுத்து வைத்துக்கொண்டேன் படிக்க.  அதேபோல் சாண்டில்யனின் ஜல தீபம்.
ஒரு காலத்தில் குமுதத்தில் சாண்டில்யன் நாவல்கள் தொடர்கதைகளாக வரும். வாசித்திருக்கிறேன். இப்போது என் சரித்திர நாவல் படிக்கும் லிஸ்டில் ஜெகசிற்பியனின் திருச்சிற்றம்பலமும் இருக்கிறார்.