ஒளி/செ.புனிதஜோதி

நிழலுக்குள் அமர்ந்திருக்கும் ஓவியக்காரன் …
அழகாய் வரைந்துகொண்டிருக்கிறான்
மாடத்தில் நிற்கும் புறாவை.

சலனமற்ற
மாடலைப் போல்
அமர்ந்திருக்கிறது புறா…

படம் பிடித்துக்கொண்டிருக்கிறான்
ஒரு கலைஞன்.
கவிதை வரைந்து கொண்டிருக்கிறான்.
ஒரு கவிஞன்..

பல அற்புதங்களை
அழகாய்த் துளிர்க்கச்
செய்துகொண்டிருந்தது
மோனம் நிறைந்த ஒளி!