
அவர்கள் வருகிறார்கள்
மீண்டும் மீண்டும்
அழுக்காறுடன் சிலரும்
ஆறுதலுடன் சிலரும்
அவாவுடன் சிலரும்
அன்புடன் சிலரும்
வெகுளும் சிலரும்
நெகிழும் சிலரும்
இன்னாத சிலரும்
இனிய சிலரும்
அழுக்காகச் சிலரும்
அப்பழுக்கின்றிச் சிலரும்
நமக்கே தெரியாமல் நமக்குள்
உலவும் உணர்வுகளாய்
அவர்கள் வருகிறார்கள்
மீண்டும் மீண்டும்
அவர்கள் வந்து போகட்டும்
நாம் நாமாகவே இருப்போம்

மன உணர்வுகளை வெல்லும்
மனிதர்களின் சித்திரம்.
அருமை.
முடிவு வரி அழுத்தமானது.
கவிஞருக்குப் பாராட்டுகள்.