
வீடுகள் வானத்தை மறைக்கவில்லை
எனினும் கண்கள் ஆகாயத்தைப் பார்ப்பதில்லை
*
இறுதி வரை போராடுவோம்
ஆனால் வீக் டேஸில் முடியாது.
*
வீடே வத்திப்பெட்டி அளவு
அதில் 10% பூஜை அறை.
*
உப்புப்பெறாத சாப்பாடு
பல்லிடுக்கில்
மாட்டிக்கொள்வதில்
குறையொன்றுமில்லை.
*
குறைவாகப் பேசு
மெதுவாகப் பேசு
மென்மையாகப் பேசு
மற்றவர்களிடம் பேசு
*
எனக்கும் கடலுக்கும்
நடுவே எத்தனை பேர்.
*
அகல் விளக்குகளின் எண்ணெயில்
சிறிது தூறல் மிதக்கிறது.
*
எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா?
கணக்குக் காட்டேன் கொஞ்சம்.
*
ஊரில் சாவு
வாயில் அவல்.
*
துன்பம் நேர்கையில்
அழுகிறதென் யாழ்.
*
உன்னைப் போல யாரும் இல்லை
யாரைப் போலும் யாரும் இல்லை.
–

அபாரம்