
நாளெல்லாம் நர்த்தனங்கள்
ஆடும்
நினைவூஞ்சல்.
பேசாத கதையெல்லாம்
பேசிவரும்
பொன்னூஞ்சல்.
வாடாத மலர்க் கூடை
ஏந்தி வரும்
எழிலூஞ்சல்
பளிச் பளிச் என மின்னாமல்
மின்னி வரும்
மின்னூஞ்சல்.
சொல்லாத சொல்லெடுத்து
சொல்லும்
சொல்லூஞ்சல்.
சிந்தாமல், சிதறாமல் நிகழ்வலை
சேர்க்கும்
நிகழ்வூஞ்சல்.
மனதின் மூன்றடுக்கில் முறை
மாறாதடுக்கும்
தரவூஞ்சல்.
சூழலுக்கேற்ற இராகங்கள்
மீட்டும்
இசையூஞ்சல்.
உடலோடு உயிரிருக்கத்
துணைவரும்
நட்பூஞ்சல் இது
