
ஆண்டவனை நோக்கி வழிபடும் நீங்கள்
ஏன் ஆண்டவனிடம் முன்னால்
மனதார மண்டியிட மாட்டேன் என்கிறீர்கள்
நீங்கள் ஒரு பக்கம் பாவம் செய்கிறீர்கள்
இன்னொரு பக்கம் உங்கள் ஆண்டவனை
துணைக்கழைக்கிறீர்கள்
உண்மையைக் கண்டு தொலைதூரம் ஓடும் நீங்கள்
ஏன் ஆண்டவனை நோக்கியும் பொய் சொல்கிறீர்கள்.
நீங்கள் செய்யும் எந்தச் செயலுக்கும்
ஆண்டவன் பதில் தரப்போவதில்லை
அவன் வெறுமனே புன்னகைகூட செய்ய
போவதில்லை
உங்கள் துணிச்சல் அதிகமாகிக்
கொண்டே போகிறது.
