மனதுக்குப் பிடித்த கவிதைகள் – தொகுதி – 2 – 158/அழகியசிங்கர்

மீசைகள் பலவிதம்

டி.வி.ராதாகிருஷ்ணன்

பரங்கியனுக்கு அடிபணியா
வீரபாண்டியன் மீசை
கப்பலோட்டிய தமிழனின்
தொங்கு மீசை
மீசையிலும் வெள்ளையனை
அணுகவிடா பாரதி மீசை
அவரது தாசனின்
அடர்த்தி மீசை
பகுத்தறிவுப் பகலவன்
பெரியாரின் தாடி மீசை
கர்மவீரன் காமராஜனின்
களையான மீசை
திருத்தணி மீட்ட
ம.பொ.சி.யின் முறுக்கு மீசை
டி.கே.சி.யின் இலக்கிய மீசை
கலைஞரின் தமிழ் மீசைப்
கருமீசை தெரியா
வைரமுத்துவின் மீசை
வாலியின் தாகூர் மீசை தாடி
தமிழனின் அழகு மீசை
பலவிதம் – அவற்றை ஒப்பிடாதீர்
அறிவிலிகளின்
கரப்பு மீசையுடன்.

நன்றி : விசையுறு பந்து – கவிதைகள் – டி.வி ராதாகிருஷ்ணன் – பக் : 120 – விலை : ரூ.140 – அகநாழிகை வெளியீடு, 26 ஜெயராமன் தெரு, கோகுலபுரம், செங்கல்பட்டு 603 001