இன்றும் ஒருநாளே /அனங்கன்

அக்கா பாவாடை பழசுதான்
எனக்கு என்றும் வாய்க்கிறது.
ஆண்டுக்கு ஒருநாள் மட்டும்
ஏனிந்த தீபாவளி வருகிறது.

விதவிதமான பலகாரங்கள் கடையில்
பார்க்க அழகாய் இருக்கிறது…
வாங்கித்தர அம்மாவிடம் எங்கே
காசு இருக்கிறது.

சென்றஆண்டு கொரானா என்று
எதுவும் வாங்கித்தரவில்லை…
இந்த ஆண்டு வாங்கித்தர
அப்பாவும் இல்லை..

கொரனாநோயில் எங்கப்பா போனதால்
எங்களுக்குத் தீபாவளி
இல்லை…
வேடிக்கை பார்க்க அக்காவைக்
கூப்பிட்டால் அவள் வருவதே இல்லை.

சன்னல் வழியே வெளியே பார்க்கப்
பார்க்க மகிழ்ச்சி தாளவில்லை….
வீட்டுக்குள்ளே தேம்பல் ஓசை
அதுதான் பிடிக்கவில்லை.