தீபாவளி வாழ்த்துக்கள்/ ஆர் வத்ஸலா

வாழ்த்துக்கள்
வந்து கொண்டே
இருக்கின்றன
தீபாவளி இன்று
என நினைவூட்டிக் கொண்டு

‘நீயறியாமல்
உனக்குள் நீ வளர்த்துக்
கொண்டிருக்கும்
அசுரனைக் கொல்’
எனக் கட்டளை இட்டபடி

வாளைத் தேடிக்
கொண்டிருக்கிறேன்
போன முறை
வேலை முடிந்ததும்
கழுவித் துடைத்து
எங்கு வைத்தேன்?