
வண்ண மத்தாப்பும்
வாண வெடிகளும்
எண்ணைக் குளியலும்
இட்டிலி , கறிகளும்
திண்ணைக் கூட்டமும்
தெருவில் ஆட்டமும்
என்றும் மறையா
இன்பக் கொண்டாட்டம்
பிழைப்பைத் தேடிப்
பிரிந்த குடும்பம்
அழைப்புக் கைபேசி
அறையில் சேர்ந்து
எரியும் மத்தாப்பும்
இனிப்பும் காரமும்
தெரியும் காட்சியில்
தீபாவளிக் கொண்டாட்டம்
