
நள்ளிரவு நேரமே
தொடங்கி விட்டான்
காத்திருக்க
அப்போதே எழுப்பி விட்டிருந்தது
வெடி சத்தம்
சாட்டை புஸ்வாணம்
தரைச் சக்கரம்
லட்சுமி வெடி ராக்கெட்
சீறும் ஓசை வைத்தே
பட்டென்று சொல்லி விடுவான்
மயில் மார்க் குயில் மார்க்
பக்கத்து வீடுகளில்
இன்னார் இன்ன வண்ணத்தில் தான்
வலம் வருவார்கள் புத்தாடையில் என்பதும்
அத்துப்படி அவனுக்கு
இனிப்புகளின்
முதல் வாசனை அவனுக்கே
இந்த ஆண்டும்
வழக்கம் போலவே
எழுந்து வந்தான்
விறுவிறுப்பாக
இந்தத் தீபாவளி நாளிலும்
நண்பகல் நேரத்தில்
அறையை விட்டு
எண்ணெய் செலவு இல்லை
ஏன், குளியல் கூட இல்லை
எந்த ஆடை என்ற குழப்பம் இல்லை
அதே பழைய சட்டை
அதே கந்தல் லுங்கி
இன்று
தேநீர்க் கடை திறந்து இருக்குமா….
பீடி கிடைக்குமா?
ஒற்றைக் கவலை
உற்சாக வாழ்க்கை !
