
விடியலில் எழுந்திருப்பது எப்பொழுதுமே
எனக்குப் பிடிக்காத விஷயம்.
பேரன் பேத்திகள் பட்டாசு வெடிக்கும்போது
அவர்களுக்குக் காயம் ஏற்படாமல் இருக்க
நரகாசூரனை வேண்டிக்கொண்டு
காவல் காக்கப் பொறுமை வேண்டும்.
வீதி ஓரங்களில் கார்கள் வெடிகள்
வெடிக்க முடியாமல்.
பலகாரங்கள் தின்று தின்று பல் வலியோடு
போனசாக வயிற்று வலியும்.
கைப்பேசியில் அரை மணிக்கொருமுறை
கங்கா ஸ்நானம் ஆச்சா என்ற
விசாரிப்பு அறுப்புகள்.
அடிக்கடி அலைவரிசையை மாற்ற
ரிமோட்டைத் தன் பிடிக்குள்ள்ளேயே
வைத்திருக்க எண்ணும்
அகங்காரச் ண்டைகள்.
பாத்து பாத்து.
புதுச் சட்டையிலப் பொத்தல் போட்டுடும்
அழுக்காயிடும் என்னும்
எச்சரிக்கைக் குரல்கள்
ஒன்பது மணிக்கே உறக்கம் வர
ஓய்ந்து போய்விடும் உடல்.
நொடிக்கொரு முறை அச்சப்பட்டு
ஓரிடத்திலும் அமர முடியாப் பறவைகள்.
தெருநாய்கள் படும் பாடு
பாவம் திண்டாட்டம்தான்.
எல்லாரும் கிளம்பிப் போனபின்
வீடும் அணிலாடும் முன்றில்தான்
