
எழுதுகிறார்கள்.
இப்பொழுதெல்லாம்
நிறையக் கவிதை
எழுதுகிறார்கள்.
நாள்தோறும்
எழுதுகிறார்கள்.அதிலும்
ஒரு மணிக்கொரு முறை
எழுதுகிறார்கள்.
நாள்தோறும் எழுதுகிறார்கள்.
நன்றாகவே
எழுதுகிறார்கள்.
ஆனால்
அவற்றில் எதுகை,மோனை
உவமை,உருவகம்
உள்ளடக்க நேர்த்தி என்றெல்லாம்
தேடி ஏமாறாதீர்.
கவித்துவம் உள்ளதா என்று
மட்டும் பார்ப்பதே
வாசகனின் வேலை.
ஆகப்
பலரும் நிறைய
எழுதுகிறார்கள்.
என்னால்தான் முடியவில்லை.
