பிதுரார்ஜிதம்/வார்ஷன் ஷையர்

தமிழில் : க.மோகனரங்கன்


இந்த பெரிய விழிகளை எங்கிருந்து பெற்றாய் ?
என் அம்மாவிடமிருந்து
இந்த இதழ்களை எங்கிருந்து பெற்றாய் ?
என் அம்மாவிடமிருந்து
இந்தத் தனிமையை ?
என் அம்மாவிடமிருந்து
இந்த விரிசலுற்ற இதயத்தை ?
என் அம்மாவிடமிருந்து
இந்த அசிரத்தை , அதை எங்கிருந்து பெற்றாய் ?
என் அப்பாவிடமிருந்து.