எஸ். சண்முகம் கவிதை

வெளிர் பச்சை முருங்கை இலைகளின்
அடர்விற்கிடையில்
மென்மஞ்சல் சிற்றிலைகள் சில
உடன் அசைவதை பார்த்துவிட்டு
வேறுபக்கம் திரும்பினேன்

எங்கு அமர்ந்திருந்துவிட்டு எழும்பிய காகமோ
நேர்கோட்டில் என்னக் கடக்கும்
அத்தருணத்தில் சிரசின் உச்சியில் கரைந்தது

எதிர்விட்டு மாடியின் கிழக்குமுகச் சுவரொன்றில்
கழுத்துவரை மட்டுமே உள்ள சுடுமண் முகத்தின்
மழுங்கியுள்ள நாசியையே
பார்த்துவிட்டு திரும்பினேன்

இப்போது முருங்கை மரத்தின் மீதோ
எதிர்வீட்டு மாடி சுவர்மீதோ
காகமோ வேறோரு பறவையோ அமர்ந்திருக்கவில்லை

வழக்கமான ஆளுமில்லை.