இனிக்கும் தமிழ் – 150/டி வி ராதாகிருஷ்ணன்

இராமாயணம் – வயிற்றில் அடக்கியவனை வயிற்றில் அடக்கியவள்

இராமனுக்கு முடி சூட்டப் போகிறார்கள் என்ற செய்தி வந்தது. கோசலைக்கு
அளவிட முடியாத மகிழ்ச்சி. எல்லோருக்கும் தானம் தர்மம் எல்லாம் செய்தாள்.
பின் கோவிலுக்கு சென்று இராமனுக்காக பிரார்த்தனை செய்கிறாள்.

இந்த அகிலத்தை எல்லாம் தன் வயிற்றில் அடக்கிய திருமாலை தன் வயிற்றில்
அடக்கியவள் பிரார்த்தனை செய்தாளாம்.என்னே ஒரு அருமையான கற்பனை.

பாடல்

என்வயின் தரும் மைந்தற்கு, இனி, அருள்
உன்வயத்தது’ என்றாள் – உலகு யாவையும்
மன்வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள்.

பொருள்

என்வயின் – என் மூலமாக
தரும் மைந்தற்கு – பிறந்த பிள்ளைக்கு
இனி – இனிமேல்
அருள் – அருள்வது
உன்வயத்தது’ – உன் கடமை
என்றாள் -என்றாள்

உலகு யாவையும் -உலகம் அனைத்தையும்
மன்வயிற்றின் – சிறந்த வயிற்றின்
அடக்கிய மாயனைத்- அடக்கிய மாயனை
தன் வயிற்றின்- தன்னுடைய வயிற்றில்
அடக்கும் தவத்தினாள்.- அடக்கி வைத்திருந்த பெருந்தவம் உடையவள்