வீடு திரும்புதல்
மதுவந்தி

நதி ததும்பும் மரம் சூழ்ந்த
கரையோரம் விளையாடிய
நாட்கள் நினைவெல்லாம்.
கொடியேற்றி பந்தல் கால் நட்டு
ஊரே திருவிழாவான
உற்சாக நாட்கள்.
மனிதர்கள் மனசு போல
சுவரோடு சுவர் ஒட்டிய
கதைகள் கலந்து பூசிய
வீடுகள் நிறைந்த தெருக்கள்.
அணை வந்தால் வரப்போகும்
வளர்ச்சியின் கனவைக் காட்டி
ஊரே காலியாச்சு.
பின், எங்கெங்கோ தெறித்துச்
சிதறிப் போனது ஊர்.
யாரோ சொல்வதுகேட்கிறது,
“திருவிழாவுக்கு வீட்டுக்குப் போவனும்”
மீண்டும் மனசெல்லாம் ஆசை.
ஆனால், எந்த ஊருக்கு?
எந்த வீட்டுக்குத் திரும்ப?
நன்றி : திரும்பி வந்தால் உனது – மதுவந்தி – குவிகம் பதிப்பகம் – பக்கங்கள் : 156 : விலை : ரூ.100. தொடர்புக்கு : 8939604745, 9442525191
