ப.மதியழகன்
அறையில் யாருமில்லை
மனக்கதவு தட்டப்பட்டது
செளகரியமான சூரல்நாற்காலி
தலைக்கு மேலே மின்விசிறி
அறைக் கதவுக்கு
தாழ்ப்பாள் உண்டு
மனதுக்குமா?
ஏதேதோ எண்ணங்கள்
அனைத்தும் குப்பை
காலமரத்தின் உச்சிக்
கிளையில் வந்தமர்ந்தேன்
அங்கிருந்து வருவோரையும்
போவோரையும் தெளிவாக
என்னால் பார்க்க முடிந்தது!
மண்ணைக் குடைந்துகொண்டிருக்கும்
புழு அண்ணாந்து
அகண்ட வானத்தைப் பார்க்காது
அது மண்ணுக்கே
எருவாகும் வரை!
