ஒரு நொடிக் கேள்வி ஒரு நொடிப் பதில் – 25

21.10.2021 – வியாழன்

அழகியசிங்கர்


அழகியசிங்கர் :    இனிய காலை வணக்கம்.

மோகினியும் :       காலை வணக்கம்.

அழகியசிங்கர் :    எனக்குத் தினமும் 3 அல்லது 4 பேர்கள் வாட்ஸ்ப்பில் காலை வணக்கம் சொல்லாமலிருப்பதில்லை.

ஜெகன் :     இப்போது எழுதப்படுகிற கவிதைகள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அழகியசிங்கர் : திருப்தியாக இல்லை. ஆனால் எனக்குப் பிடித்த கவிஞர்கள் இருக்கிறார்கள்.  ஒருவர் ஞானக்கூத்தன்.  இன்னொருவர் இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறார். 

ஜெகன் :  அவர் பெயர் என்ன?

அழகியசிங்கர் :  சொல்ல மாட்டேன்.  அவர் கவிதைகளை மட்டும் இன்னும் ரசித்துக்கொண்டிருக்கிறேன். 

மோகினி :  நீங்கள் இப்படிச் சொல்வது மற்றவர்களைக் கோபப்படுத்தி விடும்.

அழகியசிங்கர் : ஒவ்வொருடைய  கவிதையைப் படிக்கும் போது அதிருப்திதான் அதிகமாகத் தென்படுகிறது.

ஜெகன் :  கதை.

அழகியசிங்கர் : கதை கொஞ்சம் பரவாயில்லை. 

மோகினி :  அதிகமாகப் புரியாதத் தன்மை கவிதையில்தான் இருக்கிறது. கதைகளில் இல்லை.

அழகியசிங்கர் :  ஆமாம்.

ஜெகன் : நீங்கள் எதோ யோசித்துக்கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

அழகியசிங்கர் : ஆமாம். நான் ஒரு கவிதைப் புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.  என் இருப்பிடத்தில் எங்கே வைத்தேன் என்று தெரியவில்லை.

மோகினி : இன்று கூட புத்தகம் வாங்கி வந்தீர்கள் போலிருக்கிறது.

அழகியசிங்கர் : ஆமாம்.  நேஷனல் புக் டிரஸ்ட போய் புத்தகங்கள் வாங்கி வந்தேன்.  காலந்தோறும் பெண் என்ற ராஜம் கிருஷ்ணன் புத்தகம் ஒன்று வாங்கி வந்தேன்.

ஜெகன் : அதிலிருந்து ஒரு கட்டுரையை எடுத்து நாளை நம்முடைய இதழில் சேருங்கள்.

அழகியசிங்கர் : சரி

மோகினி : நான் அவசரமாக ஒரு இடம் போக வேண்டும். நீங்கள் பேசுங்கள்.

அழகியசிங்கர் : எல்லோரும் கூட்டத்தை முடித்துக் கொள்ளலாம்.